குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி. எலக்ட்ரீஷன். உயிரிழப்பு !
குடியாத்தம் ,டிச 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொண்ட சமுத்திரம் கிராமம் சமூக நீதி விடுதியின் கூடுதல் கட்டிடம் கட்ட வேலை செய்து வந்த குடியாத்தம் கஸ்பா பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி விக்ரம் த/பெ ஸ்ரீதர் (வயது -28) என்பவர் இன்று காலை 11.30 மணியளவில் மின்சாரம் தாக்கியதில் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் பிறகு
பரிசோதனையில் இறந்து விட்டார் என தெரிய வந்துள்ளது. இவரின் உடலானது உடற்கூறு ஆய்வுக்கு வேலூர் அடுக்கும் பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. இவரின் மனைவி பெயர் சந்தியா(வயது 23). இவருக்கு யாஷிகா(வயது 4) என்ற பெண் குழந்தையும் கவின் (வயது 1.1/2)என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக