தூத்துக்குடியில் அம்பேத்கர் 69 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் அம்பேத்கர் 69 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை.

தூத்துக்குடியில் அம்பேத்கர் 69 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 

டிச.6, தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அவர்களுடன் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad