ஸ்ரீவைகுண்டம் டிச 7. தமிழ் நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க தேர்தல் நடந்தது. விதிகளின் படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் ஸ்ரீவைகுண்டம் யாதவ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
தேர்தல் அதிகாரிகள் ராஜதேவமித்ரன். ராமசாமி ஆகியோர் நடத்தினர். தலைவராக வெங்கடாச்சாரி போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயலாளராக மாடசாமி சொர்ணம். பொருளாளராக சீனிப்பாண்டியன். துணைத் தலைவராக ஆறுமுகம். துணைச் செயலாளராக சங்கையா. ஆகியோரும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
செயற்குழு உறுப்பினராக தாமஸ். செல்வராஜ். மகாலிங்கம். வெங்கட்ராமன். கரையாளன். சீதாராமன். பட்டுக்கண்ணு. ஞானராஜ். தணிக்கை அதிகாரிகளாக சுந்தரபாண்டியன். ராமசாமி. கௌரவ ஆலோசகராக ஈஸ்வர மூர்த்தி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சம்பந்தன். காசியம்மாள். பரமசிவன். இசக்கி முத்து முத்தையா ஆகியோர் முன் பொழிந்தனர். நாணல்காடு முன்னாள் தலைவர் சண்முகராஜன் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை பொன்னாடை அணிவித்து பாராட்டினார். சங்கரநாராயணன் நன்றி கூறினார். தேசீய கீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக