ஸ்டார் ஹெல்த் மற்றும் வாசன் - ஏ.எஸ்.ஜி (ASG) கண் மருத்துவமனைகள் இடையே தேசிய அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 டிசம்பர், 2025

ஸ்டார் ஹெல்த் மற்றும் வாசன் - ஏ.எஸ்.ஜி (ASG) கண் மருத்துவமனைகள் இடையே தேசிய அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஸ்டார் ஹெல்த் மற்றும் வாசன் - ஏ.எஸ்.ஜி (ASG) கண் மருத்துவமனைகள் இடையே தேசிய அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

நாடெங்கிலும் உள்ள மக்கள் உயர்தர கண் சிகிச்சையை எளிதில் பெறும் வகையில், வாசன் கண் மருத்துவமனை குழுமம் & ஏ.எஸ்.ஜி (ASG) கண் மருத்துவமனைகள் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இணைந்து, இந்தியா முழுவதும் 'கேஷ்லெஸ்' (பணமில்லா) கண் சிகிச்சைக்கான சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த முக்கிய அறிவிப்பு திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள வாசன் கண் மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்பு:
இந்தச் சந்திப்பில் வாசன் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி Dr. கமல் பாபு (MBBS., DO.), ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தமிழ்நாடு சீனியர் ஏரியா மேனேஜர் பா. சங்கர், மற்றும் ஸ்டார் ஹெல்த் திருநெல்வேலி கிளையின் மேனேஜர் பெருமாள்சாமி (Palanivel) ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள்:
இந்த இணைப்பின் மூலம் ஸ்டார் ஹெல்த் பாலிசி வைத்திருப்பவர்கள், வாசன் - ஏ.எஸ்.ஜி வலைமைப்பில் உள்ள பின்வரும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் கண்ணாடி மாற்று அறுவை சிகிச்சை, ரெஃப்ராக்டிவ் சர்ஜரி, குளோகோமா, ரெட்டினா, நீரிழிவு கண் பராமரிப்பு, கார்னியா, குழந்தைகள் கண் மருத்துவம், ஸ்குவிண்ட், கண் புற்றுநோய் (Ocular Oncology), விஷ்யோ-ரெட்டினல் சர்ஜரி, இன்ட்ராலேஸ், ஆப்டிக்கல் மற்றும் காண்டாக்ட் லென்ஸ் சேவைகள் உள்ளிட்ட அனைத்து நவீன சிகிச்சைகளும் 'கேஷ்லெஸ்' முறையில் வழங்கப்படும்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிகாரிகள், இந்தத் திட்டத்தின் மூலம் ஒரே இடத்தில் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த கண் சிகிச்சையைப் பெற முடியும் என்றும், இது நாட்டின் கண் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றம் என்றும் குறிப்பிட்டனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு இந்தத் திட்டம் பெரும் உதவியாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad