ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கார்த்திகை சொக்கப்பனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 டிசம்பர், 2025

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கார்த்திகை சொக்கப்பனை.

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கார்த்திகை சொக்கப்பனை 

ஸ்ரீவைகுண்டம் டிசம்பர் 6 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஓன்றாவதுதிருப்பதி ஆன ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமியுடன் கூடிய கார்த்திகை நட்சத்திரம் திருக்கார்த்திகை நாளில் கோவில் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். 

அதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 7 மணிக்கு திருமஞ்சனம்.7.30 மணிக்கு அலங்காரம்.8 மணிக்கு தீபாராதனை. நாலாயிர திவ்வியப் பிரபந்தம். 9 மணிக்கு சாத்து முறை கோஷ்டி தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6 மணிக்கு தாய்மார்கள் ஸ்ரீதேவி. பூதேவி. தாயார்களுடன் உற்சவர் கள்ளப்பிரான் தோளிக்கினியானில் அலங்காரம் செய்யப்பட்டு மேடைப்பிள்ளாளையார் கோவில் அருகில் எழுந்தருளினார்.

சிறிது தூரத்தில் உள்ள ஓலைகளால் வேயப்பட்ட பனை மரத்திற்கு பூஜைகள் செயப்பட்டது..பின் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னர் ஸ்வாமிகள் ரத வீதிகளில் உலா வந்து 9.30 மணிக்கு கோவில் வந்தடைந்தார் .கோவிலில் பெருமாள் தொண்டையில் எண்ணை சாத்தப்படும். அதாவது நாளை முதல் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவிக்கக் கூடாது. 

வைகுண்ட ஏகாதசிக்கு முன்னர் 10 நாட்கள் அத்யயன உற்சவம் பகல் பத்து இராப்பத்து திருவிழா தொடக்க நாள் முதல் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தொடங்கும். வருட முழுவதும் தினசரி நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவித்தல் நடைபெறுவதால் சிறிது ஓய்வு கொடுப்பதற்காக தொண்டையில் எண்ணை சாத்தப் படுகிறது. 

இந்த இடைப்பட்ட நாட்களில் உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி மட்டுமே சேவிக்கப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ் . வாசு.நாராயணன் . ராமானுஜம்.சீனு. ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன் . திருவேங்கடமுடையான். சீனிவாசன்.நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன்.ஆய்வாளர் நிஷாந்தினி. அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா. உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். பேகாகரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad