டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் முறைக்கு எதிர்ப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 டிசம்பர், 2025

டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் முறைக்கு எதிர்ப்பு



ஈரோடு மாவட்டத்தில் உள்ள 182 டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மது பாட்டில்களை திரும்பப் பெறும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்த புதிய விதிமுறையின்படி, மதுபான விற்பனை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் பெற்று, காலியான பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது அந்த தொகையை வாடிக்கையாளரக்கு திருப்பி வழங்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூரியம்பாளையம் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் மற்றும் பி.எம்.எஸ். உள்ளிட்ட 7 சங்கங்களின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் 


ம.சந்தானம்

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad