கிறிஸ்துமஸ் விழா.
நாசரேத். டிசம்பர் 22. நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றியும், அவர் சொன்ன போதனைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். பள்ளி மாணவிகள் அபிகாயில் மற்றும் சுந்தரமதிவதனி வரவேற்புரை ஆற்றினார்.
பள்ளி மாணவ மாணவியர்; கிறிஸ்துமஸ் பாடல், நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சியினை நடத்தி காட்டினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி உதவி முதல்வர் மாரிதங்கம் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மாணவ மாணவியர்கள் ஒன்றுசேர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து, அவர்கள் ஆனந்தத்தினை வெளிப்படுத்தினர்.
பள்ளி மாணவிகள் ஸ்டெஃபி மற்றும் அட்ரினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். பள்ளி தாளாளர் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து வந்து நடனமாடி பள்ளி மாணவர்களை மகிழ்வித்தார்.
விழாவின் முடிவில் பள்ளி மாணவிகள் ஜெஃப்னா மற்றும் மேரி ஜாஸ்மின் நன்றியுரை கூறினார்கள். இந்த கிறிஸ்துமஸ் விழா ஏற்பாட்டினை ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவின் முடிவில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக