இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்குவதற்கான தனித்தனியாக லைசென்ஸ்கள் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் ஜேசிபி பொக்லைன் ஓட்டக்கூடிய ஹைட்ராலிக் வாகன ஓட்டுனர்களுக்கு தனியாக லைசென்ஸ் கொடுப்பதில்லை ஆனால் மற்ற மாநிலங்களில் இதற்காக தனியாக லைசென்ஸ் இருப்பதால் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஹைட்ராலிக் வாகனங்கள் இயக்கக்கூடிய பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சென்றாலும், லைசன்ஸ் என்பது வெளிமாநிலங்களுக்கு சென்று அதிக கட்டணம் கட்டி எடுக்க வேண்டி உள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடாக தமிழகத்திலேயே அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என நெல்லையில் நடைபெற்ற ஹைட்ராலிக் ஓட்டுநர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி என 4 மாவட்ட ஹைட்ராலிக் ஓட்டுநர் தொழிலாளர் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நெல்லை தாழையூத்து பகுதியில் தலைவர் அய்யம்பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் செல்வகுமார் பொருளாளர் தங்கப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராஜா துணை செயலாளர் ஜான் போஸ்கோ ஒருங்கிணைப்பாளர்கள் யோசப், ஜேக்கப் சௌந்தரபாண்டியன்
தூத்துக்குடி பொறுப்பாளர் செல்வகுமார் மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த
ஜேசிபி மற்றும் பொக்லைன் ஓட்டுநர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஜேசிபி மற்றும் பொக்லைன் ஓட்டுனர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஆபத்தான வேலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதற்கு எந்த ஒரு நிதி இழப்பும் இல்லாத சூழ்நிலையில் கைவிடப்பட்ட குடும்பங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழக அரசு ஹெவி லைசென்ஸ் கொடுப்பது போல ஹைட்ராலிக் வாகனங்களான ஜேசிபி, பொக்லைன் இயக்கும் ஓட்டுனர்களுக்கு அதற்கான பிரத்தியேக லைசன்ஸ் வழங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் இதுவரை கேரளாவில் சென்று தான் 15,000 செலவு செய்து ஹைட்ராலிக் வாகனங்கள் இயக்குவதற்கான தனிப்பட்ட லைசன்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே தமிழகத்திலும் ஹைட்ராலிக் வாகனங்களை இயக்குவதற்கான தனிப்பட்ட லைசன்ஸ் கொடுப்பதற்கு அல்லது ஹெவி லைசன்ஸில் இணைப்பதற்கு தமிழக அரசு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். ஜேசிபி அல்லது பொக்லைன் போன்ற ஹைட்ராலிக் வாகனங்களை இயக்கும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு கிடைப்பது இல்லை
எனவே ஹைட்ராலிக் வாகனம் இயக்கம் ஓட்டுனர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் தமிழக அரசு இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களை இது போன்ற தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக