உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கிளப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! !!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 டிசம்பர், 2025

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கிளப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! !!!


உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி லயன்ஸ் கிளப்

பொள்ளாச்சி சதுரங்க சங்கம்  பொள்ளாச்சி ஈம சடங்கு அறக்கட்டளை சார்பாக

உலகமாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் திருமதி ஷியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்று நல உதவித் திட்டங்களை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் சிறப்பு உரையாற்றினார்கள் முன்னிலையாக சதுரங்க சங்க செயலாளர்  திரு பரமேஸ்வரன் அவர்கள்

மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மாவட்ட பொறுப்பாளர் பாலகுமாரன் அவர்களும் லயன்ஸ் அரிமா சங்கத்தின் ப்ராஜெக்ட்  ஒருங்கிணைப்பாளர்  உயர்திரு ரமேஷ், காமராஜர், நாட்ராயன் அரிமா சங்கத்தின் தலைவர் திரு நாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சிக்கு உண்டான சேவைகளும் விளக்கி மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை தன்னம்பிக்கை வளர்ச்சிக்கு வழி செய்து தருவதாக கூறினார்கள் அந்த நேரத்தில் ஈமச்சடங்கு அறக்கட்டளையின் துணைப் பொருளாளர் திருமதி கலைவாணி.(தமிழக குரல் கோவை மாவட்ட தலைவி) 

அவர்கள் இரண்டு கால்களை இழந்த தனபாக்கியம் என்பவர்களை அழைத்து நகர மன்ற தலைவரிடம் வீல் சார் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்




மேலும் பொள்ளாச்சி south மாற்றுத்திறனாளி

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி உயர்திரு, விஜயகுமார் அவர்களும், சுபத்ரா அவர்களும் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, செய்து தருகிறோம் என்று வாக்குறுதி அளித்தார்கள் .கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருக்கும் தனித்திறமைகளை  பொள்ளாச்சி சதுரங்க சங்க செயலாளர் N பரமேஸ்வரன் அவர்கள் ஆராய்ந்து  கல்வி கல்வி உதவிகளையும், வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகளையும் செய்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்கள், உடன்  ஈமச்சடங்கு அறக்கட்டளை  மக்கள் தொடர்பு அதிகாரி  திருமதி நாகஜோதி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad