ஸ்ரீவைகுண்டம் - கள்ளப்பிரான் கோவிலில் கைசிக புராணம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 டிசம்பர், 2025

ஸ்ரீவைகுண்டம் - கள்ளப்பிரான் கோவிலில் கைசிக புராணம்.

கள்ளப்பிரான் கோவிலில் கைசிக புராணம் 

ஸ்ரீவைகுண்டம் டிசம்பர் 2 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கைசிக புராணம் வாசிக்கப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருக்குறுங்குடி பர்வதமலையில் நம் பாடுவான் என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவர் தினசரி திருக்குறுங்குடி நம்பியை இசை பாடி வழிபாட்டு வந்தார். 

கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியை முன்னிட்டு காட்டு வழியாக வரும்போது பிரம்ம ராட்சஷன் வழிமறித்து மனித மாமிசம் உண்ணும் படியாக நம்பாடுவானை தின்னப் போனான். நம் பாடுவான் தான் நம்பியை இசை பாடி வழிபாட்டு வந்தபின் உண்ணும் படி கேட்டுக் கொண்டான். 

அதற்கு ராட்சஷன் போனவன் என்றாவது திரும்பி வருவானா என்று அவனை வழி மறித்தான்.. நம் பாடுவான் 18 விதமான பாவங்களை சொல்லி வராமல் போனால் இந்த பாவங்கள் அடைவேன் என்று சொன்ன பின் ராட்சஷன் சம்மதித்தான். நம் பாடுவானும் நம்பியை இசை பாடி வழிபாட்டு திரும்பினான். 

இடையில் நம்பி மாறுவேடத்தில் வந்து போனால் உயிர் போகும் எனவே திரும்பி வேறு பாதையில் போக சொல்கிறார். ஆனால் நம்பாடுவான் உயிர் போனாலும் வார்த்தை தவற மாட்டேன் என்கிறான். நம்பி பக்தி மற்றும் சத்தியத்தை காப்பாற்றுகின்ற நம்பாடுவானை வாழ்த்தி அனுப்புகிறார். 

நம்பாடுவான் ராட்சஸன் முன் நிற்கிறான். ராட்சஷன் அவனுடைய உயிரை விட்டு அவன் புண்ணியத்தை முழுவதும் பின்னர் பாதியும் கால் பகுதியும் சிறிதளவேனும் கேட்டு மன்றாடுகிறான். அவன் உயிரைக் தவிர புண்ணியத்தை தர சம்மதிக்க வில்லை. 

பின்னர் ராட்சஷன் தான் பிரம்மகத்தி தோஷம் பெற்று இந்த நிலையில் உள்ளதாகவும் உன் போல் ஒருவனால் புண்ணியத்தை பெற்று சாபவிமோசனம் கிடைக்கும் என சாபம் என்றான். நம் பாடுவான் புண்ணியத்தை வழங்கினான். 

ராட்சஷன் சாபவிமோசனம் பெற்றான். இந்த கைசிக புராணம் ஸ்ரீ வராகப் பெருமானால் பூமி பிராட்டிக்கு சொல்லப்பட்டது. கள்ளப் பிரான் கோவிலில் சுவாமி கள்ளப்பிரான் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்ட நாயகி சோரநாதநாயகி தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். 

பின்னர் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி பெருமாள் முன்னிலையில் கைசிக புராணம் வாசித்தார். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம். சடாரி. பிரசாதம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ் ‌. வாசு. நாராயணன். ராமானுஜம்.சீனு. ஸ்தலதாதார்கள் சீனிவாசன். தேவராஜன் . திருவேங்கடத்தான். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் நிஷாந்தினி. அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா 

உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். பேக்கிரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad