தாராபுரத்தில் ரூ.3.97 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்கம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 ஜனவரி, 2026

தாராபுரத்தில் ரூ.3.97 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்கம்



அறிவுசார் மையம், சாலை, மேல்நிலைத் தொட்டி உள்ளிட்ட பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர்.

கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பெஸ்ட் நகரில் தாட்கோ சார்பில் ரூ.80.23 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம், பொட்டிக்காம்பாளையம் ஊராட்சி எருக்களாம்பாளையத்தில் ரூ.80.23 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம், தளவாய்பட்டிணம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கோவிந்தாபுரம் ஊராட்சி செட்டிபாளையத்தில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.18.10 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி, தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.10 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.


நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் பாப்புக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, நகராட்சி கவுன்சிலரும் திமுக நகரச் செயலாளருமான முருகானந்தம் தாட்கோ உதவி பொறியாளர் வினோதினி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad