சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் தொடக்கம்!
திருவண்ணாமலை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலை துறை அமைச்சர் .எ.வ.வேலு அவர்கள் போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை
செய்தியாளர்
-கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக