கோட்டார், பொதுப் பாதையில் அமைந்துள்ள 3 எல்கைக் கல்களை மாற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 ஜனவரி, 2026

கோட்டார், பொதுப் பாதையில் அமைந்துள்ள 3 எல்கைக் கல்களை மாற்றம்.

கோட்டார், வணிகர் தெருவின் பொதுப் பாதையில் அமைந்துள்ள சுமார் 60 வருடங்களுக்கு மேலாக அமைந்திருந்த 3 எல்கைக் கல்களை மாற்றம்.

நாகர்கோவில் மாநகராட்சியிலிருந்து அதிகாரிகள் பலர் வந்த நிலையில் தெரு மக்கள் பலர் ஒன்றுகூடி அதை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதனையறிந்து அங்கு வந்த தவெக கிழக்கு மாவட்ட செயலாளர்.மாதவன் தலைமையில், மாவட்ட இணைச் செயலாளர் பிரேம் குமார்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜன், மண்டல வழக்கறிஞரணி இணை ஒருங்கிணைப்பாளர் ராம்சுந்தர் மற்றும் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் வழக்கறிஞர் A.காமராஜ் கண்ணன் அவர்களும் நேரில் வந்து அந்த தெரு மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி எல்கை கற்களை எடுக்கவிடாமல் அனுப்பி வைத்தனர்.மேலும் எல்கை கற்களை எடுக்காமல் இருக்க பல உயர்அதிகாரிகளுக்கும் வணிகர் தெரு பொதுமக்கள் சார்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad