ஓய்வு பெற்று 7 மாதங்கள் கடந்தும் வேலூர் பள்ளி ஆசிரியருக்கு ஓய்வூதியம் பெற்று வழங்காத தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜனவரி, 2026

ஓய்வு பெற்று 7 மாதங்கள் கடந்தும் வேலூர் பள்ளி ஆசிரியருக்கு ஓய்வூதியம் பெற்று வழங்காத தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி !

ஓய்வு பெற்று 7  மாதங்கள்  கடந்தும் வேலூர் பள்ளி ஆசிரியருக்கு ஓய்வூதியம் பெற்று வழங்காத தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி !
வேலூர் , ஜன 8 -
ஓய்வு பெற்றற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் கோரிக்கை !

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத் தில் வேலூர் வெங்கடேஸ்வரா அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளியிலிருந்து மே-2025ல் பணி ஓய்வு பெற்று சென்னை மாநில கணக்காயரால் ஓய்வூதியம் பெற்று வழங்க ஆணை பெறப்பட்டு 7மாதங்கள் கடந்த நிலையிலும் ஓய்வூ தியம் பெற்று வழங்காத அப் பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை உடன் மேற்கொண்டு ஓய்வூதியம் பெற்று வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இன்று வேலூர் ஆசிரியர் இல்லத் தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், தலைமை தாங்கினார். அப்போது அவர்  கூறியதாவது ஜனவரி  மாதம்  24ல் கரூரில் நடைபெறும் 2வது மாநில மாநாட்டில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பது என்றும் மாநில அளவில் பல்வேறு ஓய்வு பெற்ற இயக்கங்களுடன் இணைந்து செயலாற்றுவது என்ற மாநில முடிவினை ஏற்று செயல்படுத்து வோம் என்றார்.முன்னதாக மாவட்ட செயலாளர் ஜி.ஆறுமுகம்  வரவேற்று பேசினார்.  மாவட்ட துணைத்தலைவர்கள் ஜி.விநாயகம், ஜி.ராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் இல.சீனிவாசன்,  ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். ஆசிரியர் இல்லத்தின் பொதுச் செயலாளர் டி.செல்வமுத்து சங்கத்தின் 2016ஆம் ஆண்டிற்கான மாதாந்திர நாட் காட்டி மற்றும் குறிப்பேடுகளை வெளிட் டார்  நிர்வாகிகள் பெற்றுக்கொண்ட்னர்.
காட்பாடி கிளை தலைவர் பி.ஆசீர்வாதம், செயலாளர் பி.ஜெகன்நாதன், டி.மோகன வேலு, கே.வி.குப்பம் கிளை தலைவர் பி.ஜாகிர் அகமது, செயலாளர் எம்.விஜய குமார், பொருளாளர் ஜி.குமார்  வேலூர் கிளை பொருளாளர் சு.சோமாஸ்கந்தன், செயற்குழு உறுப்பினர்கள் வி.பாலச் சந்தர், ஆர்.மகாலிங்கம் டி.தேவராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது 

1.தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்கைள் அனைவருக்கும் 10 சதவிகிதம் ஓய்வூ தியம் உயர்த்தி வழங்கிட கோரி தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
2.ஓய்வூதிய தொகுப்பு (கமுடேசன்) தொகையினை  பிடித்தம் செய்யும் காலத் தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக குறைத்திடுக
3. 80 வயது துவங்கும் போதே கூடுதல் ஓய்வூதியர் 20 சதவிகிதம் வழங்க வேண்டும்
4.மத்திய அரசு வழங்குவது போல் ரூ.1000 மருத்துவபடி வழங்க வேண்டும்
5.மூத்த குடிமக்களுக்கு இரத்து செய்யப் பட்ட இரயில் கட்டணச் சலுகை மீண்டும் வழங்க வேண்டும்.
6.அரசு பேருந்துகளில் ஓய்வூதியர்களு க்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தர வேண்டும் மாநிலக்கணக் காயரால் ஓய்வூதியம் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டு 7மாதங்கள் கடந்த பின்னரும் வேலூர் வெங்கடேஸ்வரா அரசு நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியின் ஓயவுபெற்ற உடற்கல்வி இயக்குநர் நெப்போலியன் அவர்களுக்கு அப் பள்ளி யின் தலைமையாசிரியரால் ஓய்வூதியம் பெற ஆணைகள் வழங்கப்படாத நிலை யினை இக் கூட்டம் கடும் கண்டனங் களை தெரிவிக்கிறது.  மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முறையீடு செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  2019 ஆம் ஆண்டு மார்ச் முதல் இப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியராக பணியாற்றி நெப்போலியன் இந்த ஆண்டு   31/05/ 2025 இல் பணி ஓய்வு பெற்றார். 7மாதங்கள் கடந்து இன்று வரை பணி ஓய்வு பெற்றதற்கான எவ்வித பணப் பலனும் பெறவில்லை. தலைமை ஆசிரிய ரிடமிருந்து ஆட்சேபணை இல்லா சான்றி தழ் (NOC) பெறப்படவில்லை. எனவே பணிப்பதிவேடு (SR) மாநில கணக்காயர் அலுவலகத்திலிருந்து  வரப்பெற்றும்  பணப்பலன் பெறாத நிலை உள்ளது. 
பள்ளி தலைமைஆசிரியர் தரப்பில்  நான் உடற்கல்வி இயக்குனராக இருந்தபோது இருந்த பொருள்கள் (Sports Goods) ஒப்ப டைத்த பிறகு தருவதாக கூறப்பட்டது. மூன்று முறை பள்ளிக்கு  வரவழைத்து அலைகழித்தனர். பின்னர்  அனைத்து பொருட்களும் சரிபார்க்கப்பட்டு    ஒப் படைக்கப்பட்டது. இருப்பினும்  உடற் கல்வி ஆசிரியர் கையொப்பமிடவில்லை  என்று கூறி  இதுவரை ஆட்சேபணை இல்லாச் சான்று (NOC) வழங்கப்பட வில்லை. இப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனராக இருந்தும் தலைமை ஆசிரியராக இருந்தும் சிறப்பாக பணிபுரிந்து ( மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தும், நல்ல தேர்ச்சி சதவீதம் அளித்தும்)  நற்பெயர் பெற்ற எனக்கு  மிகுந்த மன வருத்தம் அளிப்பதாக உள்ளது. எனவே தயவு கூர்ந்து தாங்கள்   பணப்பலன் மற்றும் ஓய்வூதியம் பெற வழிவகை செய்யுமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் இணை செயலாளர் கே.சேகர் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad