நாசரேத்- பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் தமிழர் திருநாள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 ஜனவரி, 2026

நாசரேத்- பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் தமிழர் திருநாள்.

நாசரேத்- பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் தமிழர் திருநாள் விழா

தமிழர் திருநாளை முன்னிட்டு பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் இன்று காலை 7:00 மணிக்கு சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை அருட் திரு ஆரோக்கிய அமல்ராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது 

சிறப்பு திருப்பலி நிறைவேறியவுடன் திருக்குடும்ப சபை சார்பாக அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. புனித பிரான்சிஸ் அசிசியார் சபை சார்பாக இறை மக்கள் அனைவருக்கும் கரும்பு வழங்கப்பட்டது. 

சிறப்பு திருப்பலியில் பிரகாசபுரம் நாசரேத் கந்தசாமிபுரம் மூக்கு பேரி மாதாவனம் இறை மக்கள் கலந்து கொண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT. அந்தோணி ராஜா. திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad