தூத்துக்குடி - காவல்துறை வாகனங்களின் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 ஜனவரி, 2026

தூத்துக்குடி - காவல்துறை வாகனங்களின் ஆய்வு.

தூத்துக்குடி - காவல்துறை வாகனங்களின் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை வாகனங்களின் ஆய்வு மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று 06.01.2026 நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் இன்று (06.01.2026) மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 31 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 135 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, 

வாகன ஓட்டுநர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்து சீர் செய்யுமாறும், சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தையும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தையும் இயக்குமாறு உத்தரவிட்டும், 

வாகனங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad