கல்லூரி மாணவர் அடித்தே கொலை. உடலை பைக்கில் எடுத்து சென்று வீசிய கொடூரம் !
வேலூர் , ஜன 6 -
வேலூர் மாவட்டம் ஊரிஸ் கல்லூரியில் பி.ஏ.டிபன்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்த திருவண்ணாமலை ஆரணி பகுதி யை சேர்ந்த (19 வயது) டேனி வளனரசு, கல்லூரி அருகே சாய்நாதபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தார்.
தினமும் பெற்றோருடன் பேசும் வழக்கம் கொண்ட அவர், கடந்த இரண்டு நாட்க ளாக தொடர்பில் இல்லாததால் சந்தேகம் ஏற்பட்டது. அறையிலும் அவர் இல்லாத தை அறிந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், டேனியுடன் தங்கியி ருந்த கிஷோர் கண்ணனை பிடித்து விசாரித்தனர். அப்போது, பாண்டிச்சேரி யை சேர்ந்த பார்த்தசாரதிக்கும் டேனிக் கும் இடையே சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்தது. ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, டேனியை அடித்து கொலை செய்ததாக விசாரணை யில் வெளிச்சம் வந்தது. பின்னர், டேனி யின் உடலை பார்த்தசாரதி மற்றும் கிஷோர் கண்ணன் இருவரும் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, ஆந்திர எல்லை அருகே சித்தப்பாறை கிராம மலைப்பகுதியில் வீசியுள்ளனர். இதை யடுத்து கிஷோர் கண்ணன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான பார்த்த சாரதியை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. கல்லூரி மாணவன் நண்பர்க ளால் கொல்லப்பட்ட சம்பவம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக