கேட்டரிங் மாணவர்களின் திறமைகளை செம்மைப்படுத்தும் பயிற்சி: ஹிந்துஸ்தான் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சி
ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
“Shaping Skills – Crafting Success”
எலிவேட்டர் பிட்ச் நிகழ்ச்சி
கோயம்புத்தூரில் அமைந்துள்ள **ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)**யின் கேட்டரிங் சயின்ஸ் & ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பில்,
“ *Shaping Skills – Crafting Success”* என்ற தலைப்பில் *Elevator Pitch* நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் 08.01.2026 (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு,
கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சாணக்கியா ஹாலில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில்,
*இந்திய சமையல் நிறுவனம், திருப்பதியை சேர்ந்த
டாக்டர் எம். திருலோகச்சந்தர்*,
ஆலோசகர் மற்றும் மூத்த சமையலர் (Consultant & Senior Chef)
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
நிகழ்ச்சியின் மூலம், கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை துறையில் பயிலும் மாணவர்களுக்கு,
தொழில்முறை திறன்களை செம்மைப்படுத்துதல்,
நடைமுறை அனுபவங்களை வளர்த்துக்கொள்ளுதல்,
வேலைவாய்ப்புகளுக்கான தயார்ப்பு,
குறுகிய நேரத்தில் தங்களை திறமையாக வெளிப்படுத்தும் Elevator Pitch நுட்பங்கள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக
செஃப் பி. ஸ்ரீதரன், உதவி பேராசிரியர், CHSM செயல்படுகிறார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக
டாக்டர் பி. பிரேம்கண்ணா,
கேட்டரிங் சயின்ஸ் & ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவர் செயல்படுகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு
கல்லூரியின் முதல்வர்
டாக்டர் ஏ. பொன்னுசாமி அவர்கள் ஆதரவளித்து வருகிறார்.
மாணவர்களின் திறமைகளை வடிவமைத்து, தொழில்முறை வெற்றிக்கான பாதையை உருவாக்கும் நோக்குடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
*Shaping skills - Crafting success* என்றால் என்ன?...
Shaping Skills – Crafting Success (கேட்டரிங் துறை):
கேட்டரிங் துறையில் வெற்றியை உருவாக்குவது திறமைகளை சரியாக வடிவமைப்பதில்தான் உள்ளது. சமையல் நுணுக்கம், சுவை சமநிலை, உணவுப் பாதுகாப்பு, நேர மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை மற்றும் குழு ஒருங்கிணைப்பு ஆகிய திறன்களை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் தரமான சேவையும், வாடிக்கையாளர் திருப்தியும் கிடைக்கிறது. இந்த திறன்களை செம்மைப்படுத்துவது தான் கேட்டரிங் துறையில் நிலையான வெற்றிக்கான அடிப்படை.
கோவை செய்திகளுக்காக தமிழக குரல் ஒளிப்பதிவாளர் கார்த்திக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக