ஸ்ரீவைகுண்டம் டிசம்பர் 7. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் முதலாவதான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் நேற்று திருவேடுபறி நடந்தது.
கடந்த 20 தேதி முதல் அத்யயன உற்சவம் பகல் பத்து இராப்பத்து தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி முதல் இராப்பத்து எட்டாம் திருநாள் திருமங்கை மன்னன் பெருமாள் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவார். பெருமாள் பின் தொடர்ந்து விரட்டு வார்.
பின் திருமங்கை மன்னன் தன் ஆட்களுடன் பிடிபட்டு பெருமாள் விசாரணைக்கு உட்படுவார். ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி பெருமாள் சார்பாக திருவாபரணங்கள் பெயர் சொல்லி கேட்க திருமங்கை மன்னன் பிரதிநிதி மணி அனைத்தும் ஒப்படைப்பதாக தெரிவித்தார்.
பின்னர் பெருமாள் மரியாதை பெற்றுக் கொண்டு திருமங்கை மன்னன் மற்றும் கள்ளப்பிரான் கோவில் எழுந்தருளினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன்.தேவராஜன். திருவேங்கட த்தான். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி.
அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக