திருவண்ணாமலையில் "நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை வழங்கினார் சட்டப்பேரவை துணை தலைவர் !
திருவண்ணாமலை , ஜன 29 -
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக நடைபெற்ற ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதை மேற்பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பொருட்கள் மற்றும் பரிசு பெட்டகம் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர் கள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர்
-கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக