கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரமடையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கோலப்போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
பொங்கல் விழாவை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம் மாட்டு வண்டியில் வருகை புரிந்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில், கருப்பு–சிவப்பு நிறச் சேலை அணிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து சமத்துவத்தைப் போற்றினர்.
இதனைத் தொடர்ந்து கோலப்போட்டி, பெண்களுக்கான உரியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
![]() |
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம் குடும்பத்தினர், காரமடை நகர செயலாளர் குரு பிரசாந்த், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகரன், மேட்டுப்பாளையம் வடக்கு நகர செயலாளர் அஷ்ரப் அலி, காரமடை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தாயனூர் பிரதீப், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முனுசாமி, காரமடை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் மனோகரன், சரோஜினி, சுமதி குமரேசன், சுமதி ரமேஷ், ஜெனிபர், உமா, மூர்த்தி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை செய்திகளுக்காக தமிழக குரல் ஒளிப்பதிவாளர் கார்த்திக்...




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக