பொள்ளாச்சி நகர திமுக வடக்கு சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் ..
இதில் முதல் விழாவான
இன்று (4.1 2026)அதிகாலையில் 6 மணி அளவில் மிதிவண்டி ஓட்டி திருவிழா பள்ளி மாணவ மாணவிகளும் , கல்வி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர் இதை இரண்டு பிரிவாக பிரித்து 6 முதல் 14 வயது வரையும் மற்றும் 15 வயது முதல் 20 வயது வரை மற்றும்
மிதிவண்டி ஓட்டுநர்கள் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்இதில்
பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்புறத்தில் இருந்து 60 நபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை நகர பொறியாளர் அணி அமைப்பாளர் பாலாஜி என்கிற பரமேஸ்வரன் தலைமையில், முதன்மை விருந்தினராக நகர மன்ற தலைவர் திருமதி, டாக்டர், சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள், சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் பற்றி ,தமிழ்நாடு திமுக அரசு மாணவர்களுக்கு வழங்கும் சேவைகளை கூறினார்கள் . அவர்களுக்கு கொடி அசைத்து துவக்கியும் வைத்தார்கள். போட்டி முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வடக்கு பொள்ளாச்சி நகர திமுக செயலாளர், உயர்திரு நவநீதகிருஷ்ணன் அவர்களும் அதிபதி வக்கீல்,சமூக சிந்தனையாளர், கம்பன் கலை மன்றம் சண்முகம் அவர்களும் கையால் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன . இவ்விழாவை பொள்ளாச்சி திமுக துணைச் செயலாளர் தர்மராஜ், திருமதி கந்த மனோகரிநகர மன்ற உறுப்பினர்,மற்றும் திமுக செயலாளர்கள்,பனிரெண்டாவது வார்டு பாரூக்,
பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சிவலிங்கம், சைக்கிளிங் கிளப் தலைவர் பர்க்கத்துல்லா ,சைக்கிளிங் கிளப் பொருளாளர் திருமதி கலைவாணி திமுக பிரமுகர்கள் Mp ஆனந்தன், சபரி, அஸ்வின்,அரவிந்த், கழகத்தின் போட்டோகிராபர் பாபுராஜ் ,மணி, ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து வைத்தார்கள்
முடிவில் தலைவர் பர்க்கதுல்லா நன்றி உரை கூறினார்! !.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக