03-01-2026 கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு வட்டம் வடசித்தூர் ஊராட்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம் ஆனது நடைபெற்றது .
இதில் வடசித்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் அனைத்து ஊர் பொதுமக்களும் வந்து மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவ முகாமில் பயன்படுத்திக் கொண்டனர் இந்த முகாமானது,
தமிழ்நாடு அரசு சார்பாக வடசித்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சேர்ந்து சிறப்பாக நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய இயக்கமும் முன்வந்து ஆதரவு தந்து,இந்த மருத்துவ முகாமினை சிறப்பாக நடத்தினார்கள் .
இந்த மருத்துவ முகாமில் மக்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர் .இதில் பயன் பெற்ற அனைவரும் இந்த முகாமிக்கு அவர்களது நன்றிகளை தெறிவித்தும் சென்றனர் .
இந்த முகாமினை சிறப்பாக நடத்த முன் வந்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றிகளுடன்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக
சூலூர் தாலுகா செய்தியாளர் R.சுப்ரமணியம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக