சிறுக்களந்தை ஊராட்சி ஜக்கார் பாளையம் கிராமத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

சிறுக்களந்தை ஊராட்சி ஜக்கார் பாளையம் கிராமத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்


03/01/2026-நேற்று சனிக்கிழமை கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரம் சிறுக்களந்தை ஊராட்சி ஜக்கார் பாளையம் கிராமத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் L&T கோயம்புத்தூர் சுகாதார மையம்,PRAYAS TRUST மற்றும் வெஸ்ட்ரிக் டிரஸ்ட் இவர்களின் கூட்டு முயற்சியால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 



கோவை வெஸ்ட்ரிக் டிரஸ்ட் ,PRAYAS TRUST மற்றும்  தி ஐ பவுண்டேஷன் இணைந்து ஜக்கார் பாளையம் கிராமத்தில் மதுரை வீரன் கோவில் அருகில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தினார்கள். 

இந்த முகாமில் ஜக்கார் பாளையம் ஊர் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள், ஐயப்ப சுவாமி பக்தர்கள், விடியில் தேடி இளைஞர் மக்கள்நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கண்களை இலவசமாக பரிசோதனை செய்து கொண்டார்கள். முகாமில் கண் பரிசோதனை செய்யப்பட்டு கண்புரை, கண் அழுத்த நோய், கண் சதை வளர்ச்சி ஆகியவை கண்டறியப்பட்டது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு, கண் கண்ணாடிகளை முற்றிலும் இலவசமாக தர இருக்கிறார்கள். இந்த முகாமினை கோவை வெஸ்ட்ரிக் ட்ரஸ்டின் நிறுவனர் திரு. G. ஜெகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். 



வெஸ்ட்ரிக் ட்ரஸ்டின் பணியாளர்கள் திரு. V. மைலேஸ், திரு. R. கார்த்திக், திரு. கோமங்கலம் கார்த்திக் மற்றும் தி ஐ பவுண்டேஷன் மருத்துவர்கள், செவிலியர்கள், கற்பகம் ஆர்டிக்கல்ஸ் திரு. K. மகேந்திரன் ஆகியோர் சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள். மேலும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் தெற்கு தோட்டம் திரு. P. குணசேகரன், திரு. கல்யாண சாமி மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டு இந்த இலவச கண் பரிசோதனை முகாமை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் M. பரமசிவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad