குண்டடம் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 ஜனவரி, 2026

குண்டடம் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு.


 திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக விவேக் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


இதற்கு முன் கவுண்டம்பாளையம் உக்கடம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த விவேக், காவல் துறை நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் குண்டடம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


புதிய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட விவேக், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம், ஒழுங்கை பேணுவதில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


மேலும், பொதுமக்கள் அச்சமின்றி வாழும் வகையில் காவல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.


குண்டடம் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சட்டவிரோத செயல்கள் மீது கடும் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.


புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad