உடுமலைப்பேட்டை நகராட்சியில் லதாங்கி திரையரங்க பின்புறம் உள்ள வீதியில்
கூட்டுறவு சங்க சார்பில் மருந்து கடை உள்ளது
கடையின் முன்பகுதியில் உள்ள தார்ச்சாலை பழுதாகி் பல மாதங்களாகிறது (இந்த பகுதி 18 வது வார்டு வார்டில் அமைந்துள்ளது பசுபதி வீதி)
இந்த சாலை அமைந்துள்ள வார்டின் நகரமன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் உள்ளார் பழுதான இந்த சாலைப்பகுதியை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது
இந்த இடம் மட்டுமல்ல பல்வேறு ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது இந்த ரோடுகளை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் , பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்
நகராட்சி நிர்வாகம் தூக்கத்திலிருந்து விழித்து நடவடிக்கை எடுக்குமா ..? பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக