கோவை மாவட்டம் சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் ‘புகையில்லா போகி’ கொண்டாடும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சரவணன், தலைமை எழுத்தர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில், சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட (NSS) மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டது.
பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கதிர்வேல், தமிழ் ஆசிரியர் செல்லையா, பள்ளி மாணவர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பேரணியின் நிறைவில்,
“என் குப்பை என் பொறுப்பு என்பதை உணர்வோம்”,
“தூய்மையான தமிழகத்தை உருவாக்குவோம்”
என்ற முழக்கங்களுடன் ‘புகையில்லா போகி’ கடைப்பிடிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
கோவை மாவட்ட செய்திகளுக்காக தமிழக குரல் ஒளிப்பதிவாளர் கார்த்திக்...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக