கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம். குமரி மாவட்ட எஸ்பி நடவடிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 ஜனவரி, 2026

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம். குமரி மாவட்ட எஸ்பி நடவடிக்கை.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம். குமரி மாவட்ட எஸ்பி நடவடிக்கை

கன்னியாகுமரி காவல் நிலையத்தில், லீபுரம் பகுதியை சேர்ந்த ஜான் மோகன் என்பவரின் மகன் ராபர்ட் சிங் (24), பால்குளம் வாரியூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சரவணக்குமார் (27) ஆகியோர் மீது 

கன்னியாகுமரி காவல் நிலைய குற்ற எண் 490/2025 u/s Man missing@ 103(1), 238(a), 190, 49 BNS சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர். உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர். அழகுமீனா மேற்படி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். 

அவ்வுத்தரவின்படி குற்றவாளிகள் ராபர்ட் சிங் மற்றும் சரவணகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றங்களில் ஈடுபடுகின்ற நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad