நாகர்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது ஆர்.டி.ஓ விசாரணை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

நாகர்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது ஆர்.டி.ஓ விசாரணை.

நாகர்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது ஆர்.டி.ஓ விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாகையடி கோட்டார் வடக்கு தெருவை சேர்ந்த செந்தில் குமார் இவர் தனியார் நிதி நிர்வனத்தில் வேலை செய்து வருகிறார். 

இவரது மனைவி சந்தியா (25) இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் செந்தில் குமாருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது சந்தியாவுக்கு தெரிய வந்தது. 

இதன் இடையே இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கு இருந்த பிரச்னையை குடும்ப பெரியவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 31ம் தேதி இரவு சந்தியா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்த போலீஸ்சார் சந்தியாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சந்தியாவின் தாயார் சிந்து (50) அளித்த புகாரின் பேரில் போலீஸ் சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும் திருமணமகி 5 ஆண்டுகளே ஆனதால் இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ஆர்.டி ஓ காளிஸ்வரி மற்றும் டவுண் டிஎஸ்பி சிவசங்கரன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். 

இதற்கிடையே தற்கொலைக்கு காரணமாக இருந்த சந்தியாவின் கணவர் செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டியதற்கான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad