காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் அரசு குழந்தைகள் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா அவைத்தலைவர் செ.நா. ஜனார்த்தனன் இனிப்பு பொங்கல் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 ஜனவரி, 2026

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் அரசு குழந்தைகள் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா அவைத்தலைவர் செ.நா. ஜனார்த்தனன் இனிப்பு பொங்கல் விழா

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில்
அரசு குழந்தைகள் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் இனிப்பு பொங்கல் வழங்கி பாராட்டு!
காட்பாடி , ஜன‌ 14 -

வேலூர் மாவட்டம்      காட்பாடி    வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில்    காட்பாடி     செங்குட்டையில் அமைந்துள்ள மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ்   இயங்கும் அரசு     குழந் தைகள் இல்லத்தில் பொங்கல் விழா 14.01.2026 காலை 11   மணியளவில் நடைபெற்றது.   அரசு குழந்தைகள் இல்லத்தின் கண்காணிப்பாளர் தௌலத் அப்சல் வரவேற்று பேசினார்.ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கி இனிப்பு பொங்கல் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறியதா வது.  இந்த இல்லத்தில் நாம் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.  இங்குள்ள மாணவிகள் சிறப்பாக கல்வி பயின்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டுமென வாழ்த்துகிறன்.   அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.  மேலும் ரெட்கிராஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சேவை அமைப்புகளும் மாணவிகளின் கல்வி  வளர்ச்சிகாக உதவிகள் செய்து வருகிறன்றனர்.  இதனை பயன்படுத்தி மாணவிகள் வளர வேண்டும் நம் நாட்டையும் வளர்த் தெடுக்க வேண்டும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்றார்.
மாவட்ட மேலாண்மைக்குழு உறுப்பினர் இரா.சீனிவாசன், சங்கத்தின் அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பி.என்.ராமச்சந்திரன், த.லிவிங்ஸ்டன் மோசஸ், பொருளியல் ஆசிரியை கலைவாணி, எம்.கே.சூர்யா, பி.ரமேஷ்,  செயலாளர்  எஸ்.எஸ்.சிவவடிவு பொரு ளாளர் வி.பழனி, இல்ல காப்பாளர் ப.சந்திரகலா, ச.ஜெயந்தி, நீ.தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இல்ல வளாகத்தில் பொங்கல் வைத்து தமிழர் திருநாள்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.  இல்ல மாணவிகள் கே.ராஜ குமாரி, கே.சந்தியா, எஸ்.பிரியதர்ஷிணி, எஸ்.லாவண்யா ஆகியோரின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.  மாணவிகள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. முடிவில் இல்ல காப்பா ளர் செ.விஜயா  நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad