திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சியின் முத்தான முதல் முன்னெடுப்பாக
மாறுவோம் மாற்றுவோம் என மாணவர்களிடையே சுற்று சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று பாரதி விகாஸ் பள்ளி, மானூர் பகுதியில் சிறப்பாக நிகழ்ச்சிகள் முதலிபாளையம் ஊராட்சி சார்பில் நடைபெற்றது.
விழாவில் பங்களித்த சிறப்பு விருந்தினர்கள் சண்முகசுந்தரம், வட்டார ஒருங்கிணைப்பாளர், திருப்பூர் ஊராட்சி, திரு. சங்கரநாராயணன், துணை பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), திருமதி. மதனகீர்த்தனா,துணை பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), திரு. ப. வேலுசாமி, தலைவர், முதலிபாளையம்- நல்லூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டு விழாவை வெற்றிகரமாக மாணவர்களின் பங்களிப்புடன் எடுத்து செல்லப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வண்ணம் துணி பைகள் வழங்கப்பட்டது. விழாவை சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகள் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக