திருப்பத்தூர் மாவட்ட அறிவியல் இயக்க மாநாட்டில் அறிவியல் ஆர்வலர் விருது வழங்கி பாராட்டு !
திருப்பத்தூர் , ஜன11 -
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட மாநாடு ஆம்பூர் ரோட்டரி சங்க அரங்கதில் நடைபெற்றது மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் சி குணசேகரன் தலை மை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் சத்தியமூர்த்தி என் சபாரத்தினம் பா.பாண்டியன் கிருஷ்ண மூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர் மேனாள் மாநில பொதுச் செயலாளர் அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ். சுப்பிர மணி ஒருங்கிணைத்தார். ஒன்றிய செயலாளர் எம் எழிலரசன் வரவேற்றார் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ. நா. ஜனார்த்தனன் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார் ஆம்பூர் மற்றும் ஆலங்காயம் வனச்சரக அலுவலர் எம் பாபு மீண்டும் மஞ்சப்பை என்ற கருத்தினை வலியுறுத்தி மஞ்சள் பை வழங்கி தமிழ்நாடு வனத்துறையின் விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்டு பேசினார் வேலூர் மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் தலைவர் என் கருணாநிதி துரை மணி கருணாகரப் பிள்ளை ஆகியோர் வாழ்த்தி பேசினர் மாவட்ட செயலாளர் பி.அச்சுதன் செயலறிக்கையை சமர்ப்பித்தார் மாவட்ட பொருளாளர் பி ஜெயசுதா நிதி அறிக்கை சமர்ப்பித்தார் விவாதங்களுக்கு பின்னர் இரண்டு அறிக்கைகளும் ஏற்கப்பட்டது
அறிவியல் ஆர்வலர் விருது வழங்கும் விழா ஆம்பூர் என்.கருணாநிதி முத்து சிலுப்பன் முனைவர் செ. நா. ஜனார்த் தனன் சா.சுப்பிரமணி சி.குணசேகரன் பி அச்சுதன் பி ஜெயசுதா ஏ மங்கையர்க் கரசி ஆகியோருக்கு அறிவியல் ஆர்வலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
பின்னர் பின்வரும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
மாவட்ட தலைவராக க.சத்தியமூர்த்தி செயலாளராக பா.பாண்டியனும் பொருளாளராக என்.சபாரத்தினமும் துணை இணை பொறுப்பாளர்களாக எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக