கன்னியாக்குமரி மாவட்டம் : தக்கலையில் தனியார் காண்வென்ட் பள்ளியில் 11 வகுப்பு படிக்கும் மாணவரான நட்டாலம் அயனிவிளையை சார்ந்த அஷ்வந்த்,
இவர் கைவிரலில் நீண்ட நாட்களாக அணிந்திருந்த மோதிரம், விரலில் இறுகி வலி கொடுத்துள்ளது.
இதனை கழற்ற முடியாமல் அவதிப்பட்ட நிலையில், பள்ளி ஆசிரியை புலியூர்குறிச்சியில் உள்ள தீயணைப்புத்துறை நிலையத்தில் சென்றால், விரலுக்கு பாதிப்பில்லாமல் மோதிரத்தை கழற்றி தருவார்கள் என கூறி மாணவனை அனுப்பி வைத்தனர்.
தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜீவன்ஸ் உத்திரவின் பெயரில் துறை வீரர்கள், அங்கு வந்த மாணவனை அமரவைத்து மோதிரம் அணிந்த விரலுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமல் மோதிரம் வெட்டும் கருவி மூலம் மோதிரத்தை அகற்றினர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக