கடந்த குடியரசு தினத்தன்று, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் பொதுமக்களின் சட்ட உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் 173(2) FIR – உங்கள் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம், புகார் அளித்தவர்களுக்கு அவர்களின் FIR-இன் அசல் நகல் இலவசமாக வழங்கப்படுகிறது.
கிராமங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஊர் காவல் கண்காணிப்பு திட்ட போலீசார் மூலம், புகார்தாரர்களின் இல்லத்திற்கே FIR நகல் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
காவல்துறையும் பொதுமக்களும் இடையிலான இடைவெளியை குறைத்து,
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும்,
புகார்தாரர்களின் சட்ட உரிமையை பாதுகாக்கவும் இந்த திட்டம் முக்கிய பங்காற்றுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்73(2) FIR உங்கள் உரிமை திட்டம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக