தோட்டியோடு இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளி மீது, கனிமவள லாரி மோதி விபத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

தோட்டியோடு இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளி மீது, கனிமவள லாரி மோதி விபத்து.

கன்னியாகுமரி மாவட்டம் : தோட்டியோடு பகுதியில் வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த தொழிலாளி மீது, கனிமவள லாரி ஒன்று வேகமாகவந்து மோதி விபத்தானதில், தொழிலாளி கால் முறிந்து படுகாயமடைந்தார்.

அங்கிருந்த போக்குவரத்து போலிஸார் ஆம்புலன்ஸ் வரவழைத்து காயமடைந்த தொழிலாளியை ஏற்றி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

குறிப்பு: கனரக வாகனங்கள் செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் சில கனிமவள லாரிகள் நிபந்தனையை மீறி நேரம் கடந்து மிக விரைவாக செல்கின்றனர்.

தற்போதைய விபத்தும், கனிமவள லாரி அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து வேகமாக வந்து, சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒதுங்கி சென்ற தொழிலாளி மீது மோதியுள்ளது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad