சட்ட விரோதமாக மரங்களை அறுத்து லாரி மூலம் கடத்தும் கும்பல் மீது நடவடிக் கை எடுக்க அப்பகுதி பொது மக்கள் சார்பில் கோரிக்கை ?
வேலூர் , ஜன 27 -
வேலூர் மாவட்டம் அமருதி சிறு மிருகக் காட்சி வனத்தில் மரஅழிப்பு குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டம் அமருதி பகுதியில் அமைந்துள்ள சிறு மிருகக் காட்சி வனம் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வனத் துறையினர் பராமரித்து வரும் இந்த வனப்பகுதிக்குள் அடிக்கடி அந்நியர்கள் ஊடுருவி, அங்கிருந்த மதிப்பு மிக்க மரங்களை சட்டவிரோதமாக வெட்டி இரவு, பகல் பாராமல் கடத்தி செல்வதாக மலை வாழ் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற னர்.குறிப்பாக, வன விலங்குகள் வாழும் பகுதிகளுக்கு அருகில் கூட மரங்கள் வெட்டப்பட்ட தடயங்கள் இருப்பதாகவும், இதனால் வன உயிரினங்களின் வாழ் விடமும் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. வனப்பகுதிக்குள் வாக னங்கள் சென்ற தடயங்களும் இருப்ப தாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த சட்டவிரோத மரவெட்டல் சம்பவங் கள் வனத்துறையினருக்கு தெரியாமலா நடக்கிறது? அல்லது கண்காணிப்பில் அலட்சியம் இருக்கிறதா? என்ற கேள்வி யையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக் கின்றனர். இதுகுறித்து உடனடி விசார ணை நடத்தி, வனத்தை சேதப்படுத்துபவ ர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வனப்பகுதி யில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.அதிகாரப் பூர்வ பதில் மற்றும் வனத்துறை விளக்கம் கிடைத்தவுடன் மேலும் தகவல்கள் வெளியாகும்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக