தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சாரபில் 100 நூறு நாள் வேலை திட்டத்தை பாது காக்க வலியுறுத்தி
ஆர்பாட்டம் கோட்டாட்சியரிடம் மனு !
குடியாத்தம் ஜூன் 23
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ் மாநிலவிவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நாடு தழுவிய ஆர்பாட்டத்தில் குடியாத்தம் பகுதியில் காந்திநகர் பாலி டெக்னிக் சந்திப்பு சாலையில் ஆர்ப் பாட்டம் மாவட்ட செயலாளர் கே. சி. பிரேம் குமார் தலைமையில். நடை பெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை மேலும் பல படுத்த வேண்டும்.வி. பி. ஜி. ராம் ஜி புதிய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் தினசரி குறைந்த பட்ச கூலி யாக ரூ. 700/- வழங்க வேண்டும்.விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனையுடன் கூடிய 21.செண்ட் நிலம் வழங்கிட வேண் டும்.பணியிடத்தில் ஏற்படும் விபத்துக ளில் பாதிக்கப்டும் தொழிலாளர்களுக் கான மருத்துவ செலவுகளை அரசு ஏற் கவும் உயிரிழப்பு ஏற்படும் நேரங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ரூ.10, லட்சம் இழப்பீடு வழங்கும் வகையில்
100 நாள் வேலைதிட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து65.வயதானவர் களுக்கு ஓய்வூதியம் ரூ. 6000/- வழங்க வேண்டும் நகராட்சி பேரூராட்சி களில் இத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்.
போன்ற கோரிக்கையினை வலியுறுத்தி
நா. பரமசிவம் வே. குமார் ஜி. தங்கவேலு
ஆர். வேலாயுதம் கே. கல்பணா சந்தர்
ஆர். அக்பர் பேசினார்கள் இறுதியாக துரைசெல்வம் மாவட்ட துணைசெயலார் நிறையுரையாற்றிஆர்பாட்டத்தை முடித்து வைத்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக