அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத் தில் 1435 பசிலி ஆண்டிற்கான ஜபபந்தி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
அணைக்கட்டு , ஜுன் 23 -வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டாட் சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026 நான்காம் நாளில் மாவட்ட ஆட்சித்தலைவர் வரு வாய் தீர்வாய அலுவலர் பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார் இன்று (23.06.2026) நடை பெற்ற ஜமாத்தின் நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளியின் மனுவினை உடனடியாக பரிசீலனை செய்து ஊன்றுக் கோல் மற்றும் கண்கண்ணாடியினை வழங்கி னார். இந்நிகழ்வின்போது தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) உடன் சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலு வலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, வட்டாட்சியர் சுகுமாரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக