ரூபாய் 5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு !
ராணிப்பேட்டை , ஜுன் 23 -
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான அலுவலக கட்டிடம் கட்ட 30 ஆண்டுகளுக்கு மேலான தால் மிகவும் பழுதடைந்திருந்தது இதனால் புதிய கட்டிடம் கட்டித் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, சென்ற திமுக ஆட்சியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டி டம் கட்டுவதற்கு ரூபாய் 5.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப் பட்டது இருப்பினும் புதிய கட்டிடம் கட்டு வதற்கான போதிய இடம் இல்லாத கார ணத்தால், அருகில் இருந்த தனியார் இடத்தில், ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான 6 சென்ட் இடத்தை தானமாக பெற்று, கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய குழு தலைவர் வடிவேலு மேற் கொண்டார்.தற்போது இந்த கட்டடம் தரை தளம் மற்றும் முதல் மாடி கொண்ட கட்டி டமாக கட்டப்பட்டு வருகிறது. இதனை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டி டத்தை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்த தாரரிடம் வலியுறுத்தினார். இந்த ஆய் வின் போது நெமிலி ஒன்றிய பொறியா ளர் சரவணன் மற்றும் ஒப்பந்ததாரர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக