அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, குடியேற்றம்.1964.ம் ஆண்டு முதல்.2025. ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜூன், 2026

அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, குடியேற்றம்.1964.ம் ஆண்டு முதல்.2025. ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !

அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, குடியேற்றம்.1964.ம் ஆண்டு முதல்.2025. ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !
குடியாத்தம் ,ஜூன் 28-
வேலூர் மாவட்டம், குடியேற்றம், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் இன்று (28.06.2026) முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  கணிதவியல் துறைத் தலைவர் முனை வர் செ. கருணாநிதி தலைமை தாங்கி னார் இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் ஆ. தாமரை வரவேற்புரை வழங்கினார் முன்னாள் மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் முனைவர்      ந கெஜலட்சுமி, முனைவர் மு. மலர்விழி, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கல்பனா மற்றும் கௌரவ விரிவுரையா ளர்கள் முனைவர் பா. சம்பத்குமார், முனைவர் என். குமரகுரு, முனைவர் சரஸ்வதி, முனைவர் கலைவாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
வரலாற்றுச் சிறப்பும், புகழும் வாழ்ந்த குடியேற்றம், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியின் வளர்ச்சிக்காக 1964-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை பயின்ற 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துக் கொண்டு, கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவர் களின் முன்னேற்றத்திற்கும் எவ்வாறு அனைவரும் உறுதுணையாக நிற்பது என்று தங்களது கருத்துகளை தெரிவித்த னர். முன்னாள் மாணவர்கள் எஸ்.எஸ். ரமேஷ்குமார், பாலாறு மருத்துவமனை மோகன், கருணாநிதி, ஆசிரியர்கள் பரசுராமன், பிரகாசம், முத்துக்குமார், சிவபிரகாசம், நந்தகுமார் மற்றும் வணி கவரித் துறை அலுவலர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கல்லூரியில் பயின்ற தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த கல்லூரியின் நிர்வாகத்திற்கு முன்னாள் மாணவர்கள் அனைவரும் நன்றிகளை கூறினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad