முக்குன்றம் கிராம அருகே 500 ஆண்டு களுக்கு மேல் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 ஜூன், 2026

முக்குன்றம் கிராம அருகே 500 ஆண்டு களுக்கு மேல் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா !

முக்குன்றம் கிராம அருகே 500 ஆண்டு களுக்கு மேல் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா !
குடியாத்தம் , ஜூன் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முக்குன்றம் கிராமத்தில் உள்ள 500 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்த அருள்மிகு பாலால அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசை யாக நடைபெற்றது குடியாத்தம் அடுத்த முக்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலால அம்மன் கோவிலில் மிகவும் பழைமை வாய்ந்த இந்த கோவில் பல லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு நேற்று வெகு விமரி சையாக கும்பாபிஷேக விழா நடை பெற்றது கும்பாபிஷேக விழா முன்னிட்டு கடந்த 22 தேதி தொடங்கி மகா கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் கோ பூஜை தொடர்ந்து இரண்டாம் கால பூஜைகள் செய்து நேற்று கோபூஜை நன்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது காலை கடம்புறப்பாடும் அதன் பின்னர் மகா கும்பாபிஷேகமும் மற்றும் சிவாச் சாரியார்கள் கலந்து கொண்டு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரை திருவருளாலும் ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் சுவாமி இந்து ஆகம விதிப்படி ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் விழாவில் முக்குன்றம் ஊராட்சி தலைவர் கங்காராம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஊராட்சி துணைத் தலை வர் ஏகராஜ் வார்டு உறுப்பினர் கலாவதி உமாபதி விழாவில் கலந்து கொண்டு கோயில் நிர்வாகிகள் கஜேந்திரன் தலை வர் செயலாளர் மூர்த்தி பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி சின்னப்பா ஊர் பெரிய தனக்கார்கள் திருக்கோயில் குழு திருப் பணி எனமந்தல வகையறா கும்பாபிஷே க குழு மற்றும் முக்குன்றம் சி.ராமாபுரம் சி.புதூர் கிராம பொது மக்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad