தனியாருக்கு சொந்தமான கிரஷர் ஆலை யை மூட வலியுறுத்தி கிராம மக்கள் கல் குவாரிகளின் லாரிகளை சிறை பிடித்து மறியல் போராட்டம் !
ராணிப்பேட்டை , ஜுன் 24 -
ராணிப்பேட்டை மாவட்டம் முசிறி ஊராட்சி க்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்பட்டு வரும் தனியா ருக்கு சொந்தமான கிரஷர் ஆலையிலிரு ந்து அதிகப்படியான தூசி படலங்கள் வெளியேறி உயர்நிலைகள் மற்றும் விவ சாய நிலங்களை பாதிக்க செய்வதாகவும் மேலும் அரசு மேட்டுக்கால் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கிரஷர் ஆலை அமைக்கப்பட்டு இருப்பதால் கிராமப்புற வேலை திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை கிராம மக்கள் மேற் கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வருவதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட் டை முன் வைத்துள்ளனர் மேலும் கிரஷர் ஆலையின் மீது ஆய்வுகளை மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க கோரி துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் மனுக்களை வழங்கிய போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இதன்காரணமாகஆத்திர மடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் கல்குவாரிகளில் இருந்து கற்கள் மற்றும் எம்சாண்ட் ஏற்றி செல்லக்கூடிய லாரி களை சிறைபிடித்து மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டத்தின் போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக் கும் கிரஷர் ஆலையின் மீது ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் மேற்கொண்டு விதிகளை மீறி செயல்படும் பட்சத்தில் அதனை நிரந்தரமாக மூட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கையாக தெரிவித்துள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக