குடியாத்தம் அருகே அரசுக்குசொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிப்பு !
குடியாத்தம் ,ஜூன் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
கல்லபாடி. கனவா மோட்டூர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நடராஜன் என்பவர் புதியதாக மாடி வீடு கட்டி உள்ளார் இந்த இடம் ஒரு பகுதி வனத் துறைக்கு சொந்தமான இடம் என்று தெரியவந்தது இதைக் குறித்து வருவாய் த்துறையினர் அளவீடு செய்து உறுதி . செய்தனர் இதைக் குறித்து வனத்துறை க்கு சொந்தமான இடத்தில் உள்ள வீட்டை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இத னால் இன்று காலை வருவாய் கோட்டாட் சியர் சுப்புலட்சுமி தலைமையில் வட்டாட் சியர் பிரியா முன்னிலையில் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் வீட்டை இடிக்கச் சென்றனர் அப்போது வீட்டின் உரிமையாளர் நடராஜன் வீட்டின் மாடி மேல் நின்று கொண்டு மண்ணெண் ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை க்கு முயற்சி செய்தார் அங்கு வந்த தீய ணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து நடராஜனை மீட்டனர் மேலும் . குடும்பத்தில் உள்ள பெண்கள் ஜே சி பி வாகனத்தின் முன் படித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை காவல்துறை அப்புறப்படுத்தி பேச்சு வார்த்தை நடத்தி . வீட்டின் ஒரு பகுதியை அப்புறப்படுத்தினார்கள் இதனால் அப் பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக