போதை இல்லா தமிழ்நாடு சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு பேரணி கொடியை அசைத்து துவக்கி வைத்த கலெக்டர் மற்றும் எஸ்பி !
திருப்பத்தூர் , ஜுன் 24 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மது விலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் வரு கின்ற 26 ஆம் தேதி சர்வதேச போதை பொருள் தவறாக பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு போதை இல்லா தமிழ்நாடு என்ற தொலைநோக்கு பார்வையை நினைவாக்கும் விதத்தில்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
அதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே ஆகிய இருவரும்ஒன்றாக கொடி அசைத்து செய்து துவக்கி வைத் தனர்.மேலும் இந்த பேரணி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்இருந்து தொடங்கி திருப்பத்தூர் நகர காவல் நிலையம் வழியாக சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் வரை சென்று திரும்பவும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கே வந் தடைந்தனர். இந்தப் பேரணியில் பள்ளி மாணவர்கள் சுமார் 5,000 மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதா கைகள் ஏந்தி பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர்
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக