காதல் விவகாரம் கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் குடும்பத்துடன் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் !
மாற்று சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலித்து வரும் பெண்ணை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் குடும்பத்துடன் ஆணவ கொலை செய்து விடுவேன் என வழக்கறிஞர் மிரட்டி வருவதாக இளம் பெண் குடும்பத்துடன் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பு!
ராணிப்பேட்டை , ஜுன் 24 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்த காயத்ரி என்ற இளம் பெண் தனது பெற்றோர்களுடன் ராணிப்பேட்டை துணை காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் நள்ளிர வில் புகார் மனு அளித்துள்ளார் அவர் குறிப்பிட்டுள்ள புகார் மனுவில் தெரிவிக் கப்படுவதாக காயத்ரி மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை கடந்த ஆறு ஆண்டு களாக பெற்றோர்கள் சம்மதத்துடன் காதலித்து வரும் நிலையில் அப்பகுதி யை சேர்ந்த வழக்கறிஞரான பகவத் என்பவர் ஏற்கனவே வேறொரு பெண் ணை காதலித்து தோல்வியடைந்த தனது தம்பியை காயத்ரி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென காயத்ரி மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் சென்று தெரிவித்துள்ளார் இந்த நிலையில் காயத்ரி மற்றும் அவர்களது பெற்றோர் கள் வழக்கறிஞர் பகவத் தெரிவித்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள னர் இதனால் ஆத்திரமடைந்த வழக்கறி ஞர் பகவத் காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினரை மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை நீ திருமணம் செய்து கொள்ளக் கூடாது எனவும் இல்லையென் றால் குடும்பத்துடன் உங்களை ஆணவக் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளனர் மேலும் காயத்ரி காதலித்து வரும் சமூகத்தை சேர்ந்த இளைஞரை யும் வழக்கறிஞர் பகவத், மணிகண்ட பிரபு, கண்ணன், சுந்தர் சந்தோஷ் ஆகியோர் கொலை செய்து விடுவேன் என மிரட்டி இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் காயத்ரி மற்றும் அவர்களது குடும்பத்தினர் ராணிப்பேட் டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தும் அவர் வழக்கறிஞர் என்பதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில் லை எனவும் எங்கு சென்றாலும் உன் னால் எதுவும் செய்ய முடியாது என வழக் கறிஞர் பகவத் மிரட்டி வருவதாக பாதிக் கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத் தினர் புகார் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் காயத்ரி தனது பெற்றோர்களு டன் தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டு ராணிப் பேட்டை துணை காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் நள்ளிரவில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக