வன்னிவேடு மோட்டூர்‌ கிராமத்தில் அருள் மிகு ஶ்ரீ கங்கையம்மன் கோவிலில் தேர் திருவிழாவில் சிறப்பு வழிபாடு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 ஜூன், 2026

வன்னிவேடு மோட்டூர்‌ கிராமத்தில் அருள் மிகு ஶ்ரீ கங்கையம்மன் கோவிலில் தேர் திருவிழாவில் சிறப்பு வழிபாடு !

வன்னிவேடு மோட்டூர்‌ கிராமத்தில் அருள் மிகு ஶ்ரீ கங்கையம்மன் கோவிலில் தேர் திருவிழாவில்  சிறப்பு வழிபாடு !
ராணிப்பேட்டை , ஜுன் 24 -
         ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அடுத்த வன்னிவேடு மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும்பழமை வாய்ந்த கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் திருக்கோவிலில் இரண்டு நாள் திருவிழா வெகு விமர்சை யாக நடைபெற்றது இந்த திருவிழாவின் பொழுது உலக நன்மைக்காகவும், ஊர் கிராம பொதுமக்கள், கால்நடைகள், நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் முதல் நாள் திருவிழாவாக அம்மனுக்கு காப்பு கட்டி விரதமிருந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களது நிலத்தில் விளைந்த தானியங் களை கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் செய்து கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்டினர்.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று ஸ்ரீ கங்கையம்மனுக்கு மனம் குளிர வைக்கும் வகையில் பூகரகம் செய்து கூழ்வார்க்கும் திருவிழாவை தொடர்ந்து பல்வேறு பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட ரத தேரில் அம்மனை அமர வைத்து ஊர் கிராம பொதுமக்கள் வீதிகளில் வழியாக. இழுத்து வந்து கோவிந்தா என பக்தி கோஷங்களை வெளிப்படுத்தி தேரை வடம் பிடித்து இழுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் மேலும் நடைபெற்ற தேர் திருவிழாவில் சிலம்பம், சுருளாட்டம், புலியாட்டம்,   ஒயிலாட்டம் கொக்கிலியாட் டம் இளைஞர்கள் பலரும் பல்வேறு ஹாலிவுட் நடிகர்களின் வேடங்களை அணிந்து கொண்டு கிராம பொதுமக்கள் அனைவரும் திருவிழாவை கொண்டாடும் விதமாக உற்சாகத்துடன் நடனமாடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad