அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஜூன், 2026

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு !

  அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டி சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு !
குடியாத்தம் ஜூன் 26
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கடந்த மே மாதம்  நடை  பெற்ற  நீட்  தேர்வு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் வினாத்தாள்கள் கசிவு ஏற்பட்டு அத்தேர்வுகள் ரத்து செய் யப்பட்டு மீண்டும் மறுதேர்வுகள் நடத்தப் பட்டது. இதனால் பல லட்சம் மாணவர் களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது.
இதை கண்டித்தும், அதற்கு பொறுப் பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் பதவி விலக கோரியும் பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் கடந்த 18.06.2026 அன்று பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கலந்துக் கொண்ட மாணவர்கள் குரல்" (*Chhattroan ki Goonj) பேரணியை நடத்தினார். 
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்துலின் பேரில் மாணவர்களின் குரல்"இயக்கத்தின் நோக்கம் குறித்த விரிவான விளக்கத்தை அளிக்கும் வகையில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் குடியாத்தம் NMD அலுவல கத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் அவர்கள் நடத்தினார்.
நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்  கிருஷ்ணவேணி ஜலந்தர், குடியாத்தம் மேற்கு வட்டார தலைவர் வீராங்கன், குடியாத்தம் நகர காங்கிரஸ் தலைவர் டாக்டர். நவீன் பிரபு,  மாவட்ட துணைத் தலைவர் விஜயேந்தி ரன், மாவட்ட பொதுச் செயலாளர் யுவ ராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ராஜேஷ், மாவட்ட ஒபிசி பிரிவு தலைவர் ராகேஷ், மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, அணைக்கட்டு வடக்கு வட்டார தலைவர் தாண்டவமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் ரங்கநாதன், ஜாகீர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad