ஆம்பூர் ESI மருத்துவமனை செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு !
வாணியம்பாடி, ஜூன்.24-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை சாலையில் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக கடைகள் கட்டி யுள்ளதால், அப்பகுதியில், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன் மருத்து வமனைக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் உடன டியாக மருத்துவமனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந் தார்.
இந்நிலையில் இ.எஸ்.ஐ மருத்துவமனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள ஆக்கி ரமிப்புகளை ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப் பட்டது.பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை அகரப்பட்ட தால் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடை ந்துள்ளனர்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக