கடலூர், ஆகஸ்ட் 25: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குள்ளஞ்சாவடி மற்றும் தோப்புக்கொல்லை பகுதிகளில், தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 1,500 பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ப. சிவக்கொழுந்து அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கடலூர் தேமுதிக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார்.
விழாவில் மாவட்டப் பொருளாளர் ஏ.பி. ராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சுமோ சுரேஷ், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் கே.பி.ஆர். சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட எழுத்து உபகரணங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் எஸ். செல்வராஜ், ஒன்றிய அவைத் தலைவர் ஏ.டி.சி. வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியப் பொருளாளர் எஸ். ஜெயபிரகாஷ், மத்திய ஒன்றியப் பொருளாளர் பெருமாள், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், செல்வகுமார், பிரபாகரன், ஜி. வேல்முருகன், சத்யராஜ், எஸ்.கே. வேல்முருகன், சமத்துக்குப்பம் ஊராட்சி செயலாளர் எஸ்.எம். சேகர், குள்ளஞ்சாவடி மணிகண்டன், அகரம் ஊராட்சி செயலாளர் பிரபாகரன், புலியூர் ஊராட்சி செயலாளர் தேவராஜ் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிளைக் கழகச் செயலாளர்கள் முருகவேல், சிவமணி, செந்தாமரை, சந்தானம், பழனி, விஜயகுமார், கார்த்திகேயன், வேல்முருகன், சுப்ரமணியன், அர்ஜுனன், சிவா உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்ட நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக