நெய்வேலியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்! 1,000 பேருக்கு அன்னதானம் – விஜயகாந்த் வேடமணிந்து பாடல்களுக்கு நடனமாடிய கலைஞர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 ஆகஸ்ட், 2026

நெய்வேலியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்! 1,000 பேருக்கு அன்னதானம் – விஜயகாந்த் வேடமணிந்து பாடல்களுக்கு நடனமாடிய கலைஞர்.


நெய்வேலி, ஆகஸ்ட் 26:
 


கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான் பேரூராட்சியில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.


தேமுதிக கங்கைகொண்டான் பேரூர் செயலாளர் எஸ். பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில் அவைத் தலைவர் ராஜசேகர், பொருளாளர் சக்திவேல் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதையொட்டி நெய்வேலி மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

தொடர்ந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட எழுத்து உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சுமார் 1,000 பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உணவருந்தினர்.


விஜயகாந்த் வேடத்தில் கலை நிகழ்ச்சி

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், கலைஞர் ஒருவர் கேப்டன் விஜயகாந்தைப் போன்று வேடமணிந்து, அவரது திரைப்படப் பாடல்களை பாடியபடி நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். விஜயகாந்தின் தோற்றத்தில் நடைபெற்ற இக்கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.


நிகழ்ச்சியில் தேமுதிக துணைச் செயலாளர்கள் புஷ்பராஜ், சுரேஷ், தக்ஷிணாமூர்த்தி, கவிதா, மாறன், மாவட்ட பிரதிநிதிகள் முரளி, முருகதாஸ், அழகுவேல், ராஜேந்திரன், கேப்டன் மன்றச் செயலாளர் கண்ணன், துணைச் செயலாளர்கள் செந்தில், அருண், தொண்டரணி செயலாளர் ஏழுமலை, துணைச் செயலாளர்கள் ராமதாஸ், செல்வம், ஸ்ரீராம், இளைஞரணி செயலாளர் முத்துக்குமரன், துணைச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், கல்வி உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதால் விழா சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad